திருப்பத்தூரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா! அதிமுகவினர் ஊர்வலம்!

 

-MMH

திருப்பத்தூரில் எம்ஜிஆரின் 104-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு ஆவின் சேர்மன் அசோகன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 

பின்பு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணாசிலை வந்தடைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏவி.நாகராஜன் தலைமையில் மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான கரு.சிதம்பரம், ஒன்றிய செயலாளர்கள் சிவமணி, இராமலிங்கம், வடிவேல் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

முன்னதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நகரச் செயலாளர் இப்ராம்ஷா அனைவரையும் வரவேற்றார். அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி ஊர்வலமாக வந்த அதிமுக நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்றனர். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் துவார் மூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் காட்டாம்பூர் முருகேசன், ஒன்றிய அவைத்தலைவர் பழனிநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிரேம்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகர்சாமி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் நேரு, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பத்மநாபன், நகர பொருளாளர் அண்ணாதுரை, 

திருப்பத்தூர் நகர் கிளை செயலாளர்கள் துரைப்பாண்டி, பாலமுருகன், காத்தமுத்து, உசேன், ஆனந்த், கோபாலகிருஷ்ணன், புதுத்தெரு முருகேசன், முருகானந்தம், வைரவராஜ், சையதுராபின், முன்னாள் நகர துணைசெயலாளர் சந்திரன், எம்ஜிஆர் மன்ற நிர்வாகி பார்த்திபன், ராமகிருஷ்ணன், சேது, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜஸ்டின்பீர்முகமது, நவநீதபாலா, குருநாதன், சரவணன், பிரபு, சிக்கந்தர்பாதுஷா, திருக்கோஷ்டியூர் சக்தி, காட்டாம்பூர் ரமேஷ், வெள்ளைச்சாமி, 12-வார்டு தண்டாயுதபாணி லியாக்கத் அலி சலவை முத்தையா மகளிரணி பிரேமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments