ஆடையுடன் ஒருவரை தொடுவது பாலியல் குற்றமாகாது என்ற தீர்ப்பு நிறுத்திவைப்பு!

 

-MMH

உடலோடு தொடர்பு இல்லாமல் ஆடையுடன் தொடுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவாக கருதப்படாது என்ற மும்பை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூர் கிட்டிகார்டன் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சிறுமி ஒருவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார். இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை நேரடியாக உடலைத் தொடாமல், ஆடையுடன் தொடுவது இந்திய தண்டனை சட்டம் 354 யின் கீழ் சிறிய குற்றமாகத்தான் கருதப்படும் என்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பெற்றோர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாக்பூர் கிளை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த உத்தரவு மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்து விடும் என அடர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிட்டதை தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments