காளாப்பூரில் மாட்டுவண்டிப் பந்தயம்!! - சீறிப்பாய்ந்த காளைகள்!!

     -MMH

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 58வது குருபூஜை விழாவை முன்னிட்டு, 4 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டது.

சுப.பார்த்தீபன் அம்பலகாரர்,மாவட்ட சேர்மன் பொன்மணி.பாஸ்கரன், அதிமுக செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜ் தலைமையேற்று மாட்டு வண்டி பந்தயத்தைத் துவக்கி வைத்தனர்.

8 மைல் தூரம் நடைபெற்ற நடுமாடு மாட்டு வண்டி பந்தயம், காளாப்பூரிலிருந்து மருதிப்பட்டி வரை சென்று மீண்டும் காளாப்பூர் திரும்பும் வகையில் நடைபெற்ற   மாட்டு வண்டி பந்தயத்தில் 12 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

போட்டியின் இறுதியில் ஆணையூர் செல்வம் அம்பலம், பறவை சின்னவேலம்மாள் இணைந்து முதல்பரிசையும்,காளாப்பூர் பாயும்புலி சுடர்தேவர் இரண்டாம் பரிசையும், பல்லவராயன்பட்டி அழகுத்தேவர் நினைவாக வர்ஷா இளமாறன் மூன்றாம் பரிசையும், குண்டேந்தல்பட்டி பவதாரணி, மாம்பட்டி பாரிவள்ளல் இணைந்து நான்காம் பரிசையும் தட்டிச்சென்றனர்.

சின்னமாடு மாட்டுவண்டி பந்தயம் 6 மைல் தூரம் நடைபெற்றது. பந்தய இலக்கு காளாப்பூரிலிருந்து எஸ்.வி.மங்கலம் மஹாராஜா கல்லூரி அருகே உள்ள பாலம் வரையிலும் சென்று, மீண்டும் காளாப்பூர் வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 40 மாடுகள் கலந்துகொண்டன.

மதுரைமாவட்டம் ஆட்டுக்குளம் வசந்தம்மாள் நினைவாக நகுநிலா முதல் பரிசையும்,தேனி மாவட்டம் சின்னமனூர் தங்கம் ரேடியோ இரண்டாம் பரிசையும்,புதுக்கோட்டை மாவட்டம் தினையாகுடி சிவா மூன்றாம் பரிசையும்,காளாப்பூர் வடக்குவாசல் செல்லியம்மன் துணை நான்காம் பரிசையும் தட்டிச்சென்றனர்.

இந்த மாட்டுவண்டி பந்தயத்தை காண சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரளாக குழுமியிருந்தனர்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments