உங்கள் தொகுதியில் ஸ்டாலின்!! - திருவண்ணா மலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின்!!

     -MMH


'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'என்ற நிகழ்ச்சியை திருவண்ணா மலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்குகிறார்.

இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட ஸ்டாலினுக்கு திண்டிவனம் புறவழிச்சாலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ தலைமையில் மாநில விவசாய அணி இணை செயலாளர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட திமுகவினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

மயிலம் தொகுதிக் குட்பட்ட தீவனூரில் எம்எல்ஏ மாசிலாமணி தலைமையிலும், செஞ்சியில் நகர செயலாளர் காஜா நஜீர்,ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலை மையிலும் வரவேற்றனர்.

-பாலாஜி தங்கமாரியப்பன்,சென்னை போரூர்.

Comments