தை பூசம் முன்னிட்டு பொள்ளாச்சி-பழனி சிறப்பு பேருந்துகள்!!

 -MMH

பழனி முருகன் கோவில் தை பூசம் முன்னிட்டு பொள்ளாச்சி பழனி சிறப்பு பேருந்துகள் பொள்ளாச்சியிலிருந்து பழனிக்கு இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடுகள் செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடக்கும் தைப்பூச திருவிழாவையொட்டி  அங்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக  பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து கூடுதல் சிறப்பு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி  இன்று 27ம் தேதி மற்றும் 28 29ம் தேதிகளில் பழனிக்கு பொள்ளாச்சியில் உள்ள 4 பணி மனைகளிலிருந்தும் கூடுதலாக 25 சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் கூட்டத்தை பொறுத்து அதிக பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments