ஊருக்கு உழைக்கும் ஊராட்சி மன்ற தலைவருக்கு குவியும் பாராட்டு..!!

     -MMH

     திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாராடி ஊராட்சியின் ஒரு வருட வரவு மற்றும் செலவு கணக்குகளை, வீடு வீடாக சென்று ஒரு வருடக் கணக்கு வழக்கை காண்பித்த ஊராட்சி மன்ற தலைவருக்கு மக்கள் பாராட்டி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை விழா மேடையில் அனைவருக்கும் தெளிவாக விளக்கி கூறிய பின்பு, அனைவரது வீடுகளுக்கும், ஒரு வருட வரவு செலவு கணக்கு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார் ஊராட்சி தலைவர் செ. செல்லதுரை.B.E., அவர்கள். ஊராட்சித்தலைவரின் இத்தகைய வெளிப்படை தன்மை ஊர்மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

மாற்றம் என்பது சொல் அல்ல செயல் என்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் நான் எதைச் சொல்லி  மக்களிடம் வாக்குசேகரித்தேனோ ஊழல் லஞ்சம் அற்ற வெளிப்படையான நிர்வாகம் அதை பேச்சுக்காக இல்லாமல் எனது மாராடி  ஊராட்சியின் ஒரு வருட வரவு செலவு கணக்கு விபரங்களை மாதவாரியாக பட்டியலிட்டு.


தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் விளையாட்டு விழா மேடையில் எதிர்கால நம்பிக்கை எங்களது கிராமத்து இளைஞர்களிடம் அதற்கான துண்டறிக்கைகளை கொடுத்தர். தன்னை முழு மனதுடன் அர்ப்பணித்து வரும் செல்லத்துரை அவர்களுக்கு மக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஈஷா, கோவை.

Comments

Anonymous said…
அருமை வாழ்த்துக்கள் ஈசா அவர்களே