பாஜக, காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்!! ஹைதர் அலி கோரிக்கை!!

  -MMH

'மாநில சுயாட்சியை ஏற்றுக் கொள்ளாத பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை மாநில கட்சிகளான அதிமுக, திமுக இரண்டும் புறக்கணிக்க வேண்டுமெனவும் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது எனும் சொல்லாடலுக்கு ஏற்ப, தொடர்ந்து பன்னெடுங்காலமாக திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் தோள்களில் தேர்தல் நேரங்களில் சவாரி செய்து விட்டு, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் மிரட்டி நெருக்கடி கொடுத்து வரும் இந்த இரு தேசிய கட்சிகளையும் எதிர் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் சேர்க்காமல் புறக்கணிக்க வேண்டுமெனவும்,

"மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" எனும் அண்ணாவின் கொள்கையை திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும் மறுக்க முடியாது. ஆனால், இந்த இரு தேசிய கட்சிகளுமே அண்ணாவின் இந்தக் கொள்கைக்கு எதிரானவை.

திமுக தலைமையகமான அறிவாலயத்தில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை கொண்டு ரெய்டு நடத்தி கொண்டே காங்கிரஸ் எவ்வாறு திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதோ, அதே பாணியில் அதைவிட பன்மடங்கு அதிகமாக மத்திய விசாரணை துறைகளைக் கொண்டு ஆளும் அதிமுகவை பாஜக மிரட்டி வருகிறது என்றும், அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிரான இவ்விரு தேசிய கட்சிகளையும் திமுகவும், அதிமுகவும் புறக்கணித்து பிராந்திய கட்சிகளின் கூட்டமைப்பே மத்தியில் ஆளத்தக்க அளவில்கூட்டணிகளையும், செயல்திட்டங்களையும் அமைக்க வேண்டுமெனவும், இதன் மூலம் இரு மாநிலக் கட்சிகளும் தனது தொண்டர்கள் சுயகவுரவத்தை இழக்காமல் உற்சாகத்துடன் தேர்தல் பணி செய்ய வைக்க முடியும், தமிழகத்தின் இருபெறும் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கு சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளதாகவும்' தமிழக அரசின் முன்னாள் வக்பு வாரியத் தலைவர், செ.ஹைதர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாரூக்.

Comments