இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது? அமைச்சர் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி!

-MMH

'இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள். எவ்வளவு அசிங்கமாக போய்க் கொண்டிருக்கிறது என்று சிந்தியுங்கள்' என அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசனம் பேசியதால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்றது. மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தார். 

கூட்டத்தில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் திமுகவினர் தடை உத்தரவு கேட்டனர். ஆனால் நீதியரசர்கள் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்து விட்டனர். இதனால் நாமெல்லாம் மகிழ்ச்சியாக பொங்கல் பரிசு ரூ.2,500 பெற முடிந்தது.

தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள். எவ்வளவு அசிங்கமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று சிந்தியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் மருதராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சரின் பேச்சைக் கேட்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இரு தினங்களுக்கு முன்பு வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், ஸ்டாலினை நாளை முதல்வராக வரப்போகிறவர் எனப் பேசினார். இந்நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது பாருங்கள் எனப் பேசியது, அக்கட்சியினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ராயல் ஹமீது.

Comments