இலவச ஆடுகள் பெற்று கொண்ட மக்கள்..!!

     -MMH

     உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் நல்லாம்பள்ளி மற்றும் சீலக்காம்பட்டி ஊராட்சியில் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 514 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா ஆடுகளை வழங்கினார். இதில்  சார் ஆட்சியர் வைத்தியநாதன், வட்டாட்சியர் தணிகைவேல், நல்லாம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பாலச்சந்தர், ஒன்றிய குழுத் தலைவர் லட்சுமி, சீலக்காம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீரன், உதவி தலைவர் சம்பத்குமார் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments