கோவை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்திராபுரம், புளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ,ஜெயராமன் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மூன்றாவது வாரம் அல்லது நான்காவது வாரம் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஆகிய இருவரும் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் ஒரே வாகனத்தில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல தேவர் சிலைக்கு இருவரும் ஒற்றுமையுடன் மாலை அணிவித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டனர்.
வேண்டுமென்றே சிலர் கருத்து வேறுபாடு இருப்பதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். இருவரும் ஒட்டிப் பிறந்த குழந்தைகள் போல சகோதரத்துவத்தோடு இருந்து வருகிறார்கள். அதனால் பாகப்பிரிவினை செய்யவேண்டிய அவசியம் இல்லை அதிமுகவை முறியடிக்கும் சதி உடைக்கப்படும். வருகின்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.
Comments