விவசாயிகளின் போராட்டத்தை விளக்கி எஸ்டிபிஐ கட்சியினர் துண்டு பிரசுரம் வழங்கினர்!!

-MMH

பொன்னமராவதியில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டிய அவசியம் குறித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை விளக்கியும் எஸ்டிபிஐ கட்சியினர் துண்டு பிரசுரம் வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையம் அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்,  வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டி அவசியம் குறித்தும் டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை விளக்கியும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. 

இதில் திருமயம் தொகுதி தலைவர் அப்துல் மஜீத், தொகுதி செயலாளர் முகமது இஸ்மாயில், பொன்னமராவதி நகர தலைவர் சேக் முகமது, பொன்னமராவதி நகர செயலாளர் முகமது மன்சூர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அண்ணாசாலை கடைவீதிகளில் உள்ள வர்த்தகர்கள் வணிகர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-M.சதாம் உசேன்.

Comments