மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் உடல்நலம் பெற சர்வ சமய பிரார்த்தனை..!

-MMH

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது உயர் சிகிச்சைக்காக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் மாற்றப்பட்டுள்ளார். எனவே, அமைச்சரின் சொந்த ஊரான மன்னார்குடியில் பொதுமக்கள் பெரும் துயரத்தை அடைந்தனர். 

இதனையடுத்து மன்னார்குடி நேசக்கரம் அமைப்பின் சார்பாக சர்வமத கூட்டுப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் இரவு 7 மணிக்கு அனைத்து சமயங்களையும் சார்ந்த குருமார்களும் கலந்துகொண்டு அமைச்சரின் உடல்நலம் ஆரோக்கியம் பெற வேண்டி அவரவர்கள் மதச் சமய முறைப்படி பிரார்த்தனை செய்தார்கள்.


இதில் நேசக்கரம் அமைப்பின் தலைவர் காவிரி.ரெங்கநாதன் தலைமை வகித்தார். மருத்துவர் லயன்ஸ் அசோக் குமார், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், ஐக்கிய ஜமாத் தலைவர் அப்துல் கரீம், பெரிய பள்ளிவாசல் தலைவர் சபி, கர்த்தநாதபுரம் மாதா கோயிலின் தலைமை ஃபாதர் செலஸ்தீன்,

வ.உ.சி சாலை சர்ச் ஃபாதர் பெஞ்சமின், சிவனடியார் திருக்கூட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோவிலை சார்ந்த தீட்சதர்கள் அனைவரும் சேர்ந்து அவரவர்கள் முறைப்படி அமைச்சர் உடல்நலம் பெற வேண்டி சர்வசமய பிரார்த்தனை செய்தார்கள். இதில் மன்னார்குடி பொதுமக்கள், அனைத்து சேவை சங்க தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றார்கள்

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ரைட் ரபீக்.

Comments