சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு கோலாகலம்! ஆயிரக்கணக்கானோர் உற்சாகம்!

 

-MMH

சிங்கம்புணரியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 10 ஆயிரம் பார்வையாளர்கள், 300 மேற்பட்ட காளைகள் பங்கேற்பு. ஏராளமானோர் காயம். சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மஞ்சுவிரட்டு நடைபெறும் இடங்களில் சிங்கம்புணரியும் ஒன்று.

நேற்று காலையில் இருந்தே சுற்றுப்புற கிராமங்களான பட்டகோயில்களம், பாரதி நகா், மணப்பட்டி, கோவில்பட்டி, சிவபுரிப்பட்டி, அணைக்கரைப்பட்டி, மலம்பட்டி, கொடுக்கம்பட்டி, நாட்டாா்மங்கலம், பனையம்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து,


  300-க்கும் மேற்பட்ட காளைகள் களம் சிங்கம்புணரிக்கு வரத்தொடங்கின. பெண்களும் தங்களுடைய வளர்ப்புக் காளைகளை அழைத்து வந்து,

களமிறக்கினர். 12 மணியிலிருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மழையின் காரணமாக சேறும் சகதியுமாக இருந்ததால் பல மாடுகள் சகதியில் வழுக்கி விழுந்து மீண்டும் எழுந்து ஓடின. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டு பொதுமக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. இறுதியாக சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் காளைகள் தொழுவிலிருந்து அவிழ்த்து விடப்பட்டன.  அதை பொதுமக்கள் தொட்டு வணங்கிச் சென்றனர்.

100க்கும் மேற்பட்ட சிறு சிறு காயங்களுடன் வீடு திரும்பினர். 

பலத்த காயமடைந்தவர்கள் 5க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக 

மதுரை அரசு மருத்துவமனைக்கு

108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments