முகநூல் கொள்ளையர் பராக்!

     -MMH

     ஐயகோ! "இன்னும் எப்படியெல்லாம் ஏமாற்றுவாரோ, நாட்டிலே.....இந்த நாட்டிலே.......!" என்று பாடத் தோன்றுகிறது.

முகம் தெரியாதவர்கள் கலந்து உறவாடும் இடத்திற்கு முகநூல் என்று பெயராம்! அம்முகநூல்வழி புதிய முகமூடிக் கொள்ளையர் கிளம்பி இருக்கிறார்கள் மக்களே, ஜாக்கிரதை!

வீடுபுகு கொள்ளை, வழிபறிக் கொள்ளை,  வங்கிக்கொள்ளை, ATM கொள்ளை,  (செயின்)இழுபறிக்கொள்ளை வரிசையில் மக்களை அச்சுறுத்தும்  இணையக்கொள்ளையில் இதோ புதிதாக ஒன்று.

ஆம்! எப்படியோ நமக்கு அறிமுகமான நபர்களின் முகநூல் கணக்கைக் கைப்பற்றி, அவர்கள் தொடர்பில் இருப்பவர்களிடம் பணம் திருடும் புது யுக்தி கொண்ட கும்பல் ஒன்று முளைத்திருக்கிறது. 

கவனம் மக்களே! நமக்கு நன்கு அறிமுகமானவர் தலைபோகும் அவசரம் என்றாலும் நேரடியாகப் பேசி உறுதிப்படுத்திக் கொள்ளாமல் எந்த பணப் பரிவர்த்தனையும் செய்யாதீர்கள்.நண்பர் ஒருவரது அனுபவப் பதிவைப் பாருங்கள். 

விழிப்புணர்வுக்காய்,

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.

Comments