'நரம்பு தளர்ச்சி' எதனால் ஏற்படுகிறது?.. அதற்கு சிறந்த இயற்கை வழிகள் இதோ!!

     -MMH

நம் உடலில் மிகவும் முக்கியமான பகுதி நரம்பு. அவை தான் நம் உடலுக்கு அடிப்படை இயக்கமாக உள்ளது. அப்பேற்பட்ட நரம்புகள் நலமின்றி பாதிப்படைவது எதனால்? அதற்கு சிறந்த வழிகள் பற்றி பார்க்கலாம்.

நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்:

கை, கால் மரத்து போதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தலைவலி, மிகவும் குறைவாக அல்லது அதிக வேர்வை, எரிச்சல், நிலை தடுமாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் வாய்ப்பு உள்ளது.

சரிசெய்ய இயற்கை வழிகள்:

⧭உணவில் வாழைப்பூ அதிக அளவு சேர்த்துக் கொள்வது நல்லது.

⧭பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி கட்டுப்படும்.

⧭தினமும் படுக்கைக்கு முன் வெந்நீரில் ஒ௫ ஸ்பூன் கடுக்காய் பொடி சேர்த்து குடிப்பது நல்லது.

⧭ஜாதிக்காய் பவுடர் தினமும் காலை மாலை வேளையில் பால் அல்லது தேனில் கலந்து குடித்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும்.

⧭தாமரை தண்டு, விதையை தினமும் சாப்பிட நல்லது.

⧭பொன்னாங்கண்ணி மற்றும் மணத்தக்காளி கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

நரம்புகள் வலு பெற:

⧭பிரண்டையை உணவில் நரம்புகள் வலு பெற மற்றும் நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் குணமாகும்.

⧭நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் மாதுளையை சாப்பிட்டால் உடல் சூடுதனிந்து நரம்புகள் வலு பெற உதவும்.

⧭வெற்றிலையை வெறும் வாயில் மெள்ளி சாப்பிட ஜீரண கோளாறு மற்றும் நன்கு பசி எடுக்கும். எனவே நரம்பு தளர்ச்சிக்கு இது ஒரு நல்ல ம௫ந்து.

-ஸ்டார் வெங்கட்.

Comments