கோவை அடுத்த வெள்ளலூரில் உருவாகும் புதிய பிரம்மாண்ட பேருந்து நிலையம்!!

     -MMH

     கோவை : கோவை அடுத்த வெள்ளலூரில் உருவாகும் புதிய பிரம்மாண்ட பேருந்து நிலையத்தில் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் உள்ள காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம் ஆம்னி பேருந்து நிலையம் என 4 பேருந்து நிலையங்கள் உள்ளன.

கோவை மாநகரம் வளர்ந்து வரும் சிட்டியாக உள்ளது. கோவை நகரம் ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்தை தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து, கோவையில் உள்ள ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு தற்போது அவைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தயாராகி வருகிறது.

கோவை – அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10 கி.மீ., துாரத்துக்கு, ரூ.1,621 கோடியில், நான்கு வழி மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை கருத்தில் கொண்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவை புறநகர் பகுதியான வெள்ளலூரில் ரூ.172 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதற்காக வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ரூ.60.11 கோடியில் குப்பைகளை நவீன முறையில் மக்க வைக்கும் பயோ மைனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து குப்பைகிடங்கில் உள்ள குப்பைகள் அகற்றி சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கு வெள்ளலூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   

அதன் படி பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இடையில் கொரோனா காலம் என்பதால் பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் துவங்கி வருகிறது. தற்போது வெள்ளலூர் பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

-ஸ்டார் வெங்கட்.

Comments