மூலத்துறை கூட்டுறவு வங்கித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி!!

     -MMH

தமிழக கேரள எல்லைப் பகுதியான பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியிலுள்ள மூலத்துறை கூட்டுறவு வங்கியின் 11 பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியினருக்கும், கம்யூனிஸ்ட் ஜனதா தளம் கூட்டணி கட்சியினருக்கும் கடும் போட்டி நிலவியது.

 இந்நிலையில் தேர்தல் முடிந்த நேற்று மாலையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் 11 இடங்களையும் கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி சந்தோஷத்தை கொண்டாடினர். இதனையடுத்து வெற்றி பெற்ற 11 பேரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments