சிங்கம்புணரி அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது!!

      -MMH
      சிங்கம்புணரி தாலுகா, எஸ்.புதூர் ஒன்றியம், ரெகுநாதபட்டியில் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது.

ரெகுநாதபட்டியில் பணம் வைத்து சூதாடுவதாக உலகம்பட்டி காவல்துறையினருக்கு அடிக்கடி தகவல் வந்து கொண்டிருந்தது.


உடனே  அப்பகுதியில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்திய காவல்துறையினர், ரெகுநாதபட்டி பேருந்துநிறுத்தத்தின் பின்புறம் அதே கிராமத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வம் (வயது 29), அப்துல் கபார் (35), பிரபுராஜ் (40), ராஜ் (22), செல்வம் (45), மாணிக்கம் (50), செல்வம் (38), ராஜிவ்காந்தி (30), ரவி (45) ஆகியோர் பணம் வைத்து சூதாடியதைக் கண்டனர்.

9 பேரையும் கைது செய்து 900 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments