கூடுதல் வருவாய்க்காக முட்டைக்கோஸ் சாகுபடி!

 

-MMH

     பாக்கு தோப்புகளில், கூடுதல் வருவாய்க்காக முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. தொண்டாமுத்துார் வட்டாரத்தில், கூலியாட்கள் பற்றாக்குறையால், நீர்வளம் உள்ள பகுதிகளில், சமீப காலமாக பாக்கு சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. அந்த தோப்புகளில், கூடுதல் வருவாய்க்காக குறுகிய கால காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

செம்மேடு, முட்டத்துவயல் உள்ளிட்ட பகுதிகளில், வளர்ச்சி பெற்ற பாக்கு மரங்களுக்கு இடையில், முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், நல்ல உரமும் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments