நெடுஞ்சாலை துறை பணிகளால் சாலையில் மண் புழுதி!!

     -MMH

     பொள்ளாச்சி தேர்நிலையம் சாலையில் செல்ல முக கவசம் கட்டாயம்..!!ஏன்?எதற்கு?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேர்நிலையம் சாலை மரப்பேட்டை சாலை அரசு மருத்துவமனை சாலை ஆகிய இடங்களில் அரசு  சாலை விரிவாக்கம் மற்றும் பாலங்கள் கட்டும் பணிகள் நெடுஞ்சாலை துறை பணிகள் செய்து வருகிறது.

பொள்ளாச்சி தேர்நிலையம் வாணியர் மடம் உள்ள சாலையில் பணிகள் நடந்து வருவதால் மண் புழுதி உடன் கூடிய புகைமண்டலம் ஆக  காட்சி அளிக்கிறது தற்போது.

வாகனங்கள் செல்லவும் பொது மக்கள் சாலையில் செல்லவும் சிரமமாக உள்ளது. நிச்சயம் முககவசம் அணிந்து மட்டுமே செல்ல கூடிய நிலையில் இந்த வழித்தடம் உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments