சிங்கம்புணரியில் அரசுப் பேருந்துகளின் அவலநிலை!!
திருப்பத்தூர் அரசு பேருந்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் நகரப் பேருந்துகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது.
ஆயுட்காலம் காலாவதியான பேருந்துகளைக் கூட நகரப்பேருந்தாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு நகரப்பேருந்து சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் முக்கிய பாகமான உருளை தானாக கழண்டு விழுந்தது.
கீழ் பகுதி உருளையின் பொருத்து விடுபட்டு சாலையில் விழுந்து சாலையில் உருளை உராய்த்துக் கொண்டு சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது.பேருந்து மிதமான வேகத்தில் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பீதி அடைந்தனர். அதன்பின் மாற்று பேருந்தில் ஏறி பயணிகள் பயணம் செய்தனர்.
- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments