சிங்கம்புணரி அருகே நடந்த விபத்தில் மேலும் ஒருவர் பலி!

     -MMH
      சிங்கம்புணரி அருகே  நாட்டார்மங்கலம் சாலையில் தனியார் பள்ளி அருகே உள்ள குடியிருப்பை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் லோகேஷ்வரன். 

அவரது நண்பர்கள் கண்ணமங்கலப்பட்டியை சேர்ந்த மலைச்சாமி அதே ஊரைசேர்ந்த மற்றும் ராமகிருஷ்ணன்.

மூவரும் சிங்கம்புணரியை அடுத்துள்ள அணைக்கரைபட்டியில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை காண்பதற்காக ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அணைக்கரைப்பட்டிக்கு முன்பாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், பாலாற்றுப் பாலத்தில் மோதி 3 பேரும் தூக்கி வீசப்பட்டார்கள்.

இதில் லோகேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து நாளைய வரலாறு இதழில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். பலத்த காயம் ஏற்பட்டிருந்த மலைச்சாமியையும், ராமகிருஷ்ணனையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் உயிரிழந்தார்.

இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments