கோவை போலீஸ்....ஹாட்ஸ் ஆஃப் யூ! இனி போக்குவரத்து போலீசார் சீருடையில் கேமரா!

 

-MMH

     கோவை மாவட்ட போலீசாருக்கு சீருடையில் பொருத்தும் கேமராவை, எஸ்.பி., வழங்கினார். போலீசார் வாகன சோதனை நடத்தும்போது, வாகன ஓட்டிகளுடன், அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே, கைகலப்பு ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னைகளை தடுக்க, போலீசார் சீருடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக, கோவை மாநகர போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ.,க்கள், 50 பேருக்கு, கடந்த ஜூன் முதல் கேமரா வழங்கப்பட்டது. புறநகரில் பணியாற்றும் எஸ்.ஐ.,க்கள், 50 பேருக்கு முதல் கட்டமாக நேற்று சீருடை கேமரா வழங்கப்பட்டது. கோவை ரூரல் எஸ்.பி., அருளரசு, எஸ்.ஐ.,க்கள் சட்டையில் கேமரா பொருத்தி, திட்டத்தை துவக்கி வைத்தார்.

இனி பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும்.  காவலர்களைக்  கடமையைச் செய்யவிடாத விஷமிகளை அடையாளம் காணவும்,   பொய்க்கேஸ் போடுவது போன்ற முறைகேடுகள் நடவாமல் தடுக்கவும் பயனுள்ள அருமையான ஏற்பாடு தான். ஹாட்ஸ் ஆஃப் யூ கோவை போலீஸ்!

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments