மகளிர் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் ஆண்களே..கவனம்! - அரசு அதிரடி உத்தரவு!!

     -MMH
     தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்கள் இனி மகளிர் இருக்கையில் அமரக்கூடாது என அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை பேருந்தில் பெண்களுக்கு என தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டு பேருந்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அது இடத்திற்கு இடம் மாறுபடும். சென்னையில் பேருந்தின் இடதுபுறம், கோவையில் பேருந்தின் முன்பகுதி என பெண்களுக்கான இடம் மாறுபடும்.

ஆனாலும் பெண்களுக்கான இடத்தில் பெண்கள் உட்கார வேண்டும் என்பதே விதி. ஆனால் சில பேருந்துகளில் இந்த விதிமுறை கடைப்பிடிக்கப் படுவதில்லை. அதனால் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக நின்று கொண்டு வரும் போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர்.


இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு பல்வேறு புகார்கள் வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அரசு பேருந்துகளில் பெண்கள் அமரும் இடத்தில் ஆண்கள் உட்காரக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று, இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments