வீட்டில் இருந்து சென்ற மாணவனை காணவில்லை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்..!!
புளியம்பட்டி விண்ணம்பள்ளி சனாதிபதி கதவு எண்7/42 வசிக்கும் பொன்னுச்சாமி என்பவருடைய மகன் நவீன் குமார்17 வயது. பள்ளி மாணவன் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் வெளியில் சென்ற நவீன்குமார் வரவில்லை என்பதால் பதறிப்போன பெற்றோர்.பொன்னுச்சாமி புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் தனது மகன் நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார் அவன் வரவில்லை.
அவனை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தை அணுகி உள்ளார் பொன்னுச்சாமி. மகன் நவீன் குமார் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டை கருப்பு பேண்ட் அணிந்திருந்தான் என்றும் அவனை கண்டுபிடித்து தரவேண்டும் என்று புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் காணாமல் போன சிறுவன் நவீன் குமாரை தேடி வருகிறார்கள் இந்த மாணவனின் தகவல் தெரியவந்தால் புளியம்பட்டி காவல் நிலைய 9498101245 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈசா, கிரி.
Comments