இணையத்தில் பெண் தேடுபவரா நீங்கள்? கொஞ்சமல்ல, ரொம்பவே உஷாரா இருங்க!

 

-MMH

     இணையத்தில் திருமணத்திற்காகப் பெண் தேடிய கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் அறிமுகமான பெண் ஒருவர், இளைஞரின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார். சளைக்காமல் இளைஞரும் அப்பெண்ணுக்கு நிர்வாண காணொலிப் பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார். அதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்தப் பெண், இளைஞரிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வருவதாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவன் ஷாதி இணையதளத்தில், 

இளைஞர் ஒருவர் பெண் தேவை எனப் பதிவிட்டுள்ளார். அப்போது, இளைஞரின் பக்கத்தைப் பார்த்த பெண் ஒருவர், இவரைக் குறித்து அறிந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். உடனே பெண்ணை இணையம் வழியாகத் தொடர்புகொண்ட இளைஞர், தன் நட்பை வளர்க்கத் தொடங்கியுள்ளார்.

நாளடைவில் இவர்களின் நட்பு வலுப்பெற, இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தனர். அதற்கு இளைஞரின் நிர்வாண புகைப்படம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த பெண், தன் நிர்வாண படத்தையும் அவருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

தொடர்ந்து பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்த இளைஞர், எவ்வித கூச்சமும் இல்லாமல், புகைப்படத்திற்குப் பதிலாகத் தனது நிர்வாண காணொலியைப் பதிவுசெய்து அனுப்பியுள்ளார். அடுத்த நிமிடம் தான் இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், ‘ஒரு லட்சம் பணம் கொடு, இல்லையேல் உன் நிர்வாண காணொலியை இணையத்தில் பதிவிட்டு விடுவேன்’ எனப் பெண் தரப்பிலிருந்து குறுந்தகவல் வந்துள்ளது. அதிர்ந்து போன இளைஞர் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள, உடனடியாக பணப்பரிவர்த்தனை செயலியின் மூலம் பணத்தை அனுப்பியுள்ளார்.

எனினும், விடாத அப்பெண் தொடர்ந்து இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். வெறுத்துப் போன இளைஞர் பெண் குறித்து ஹுலிமாவு காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து இளைஞரிடமிருந்து தகவல்களைப் பெற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து, பணம் கேட்டு மிரட்டிவரும் பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ராயல் ஹமீது.

Comments