பொள்ளாச்சி ஆனைமலை அருகே பரபரப்பு!! தூக்கத்தில் இருந்த போது வீடு தீக்கிரையானது!!

     -MMH


கோவை மாவட்டம் பொள்ளாச்சி  ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம்பாளையம் காலனியில் கணவனை இழந்த வாழும் சித்ரா தனது மகன் கணேஷ், மருமகள் சரண்யா ஆகியோருடன் குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் மூவரும் இரவு உணவு எடுத்துக்கொண்டு தூங்கச் சென்றனர். 

                                      

தூங்கச் சென்ற சிறிது நேரத்தில் வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது. இதைக்கண்ட பக்கத்து வீட்டுக்காரர் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு மூவரும் விழித்துப் பார்த்தபொழுது தன் வீட்டில் தீப்பற்றி எரிய மூவரும் அதிர்ச்சியானார்கள். அவசரஅவசரமாக மூவரும் உயிர் பிழைத்தால் போதும் என்று வெளியே வந்து அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியோடு  தீயை அணைப்பதற்குள் வீடு எரிந்து சாம்பலானது. 


இச்சம்பவத்தால் வீட்டிலிருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம்,அரிசி பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் tv துணிமணிகள் உள்ளிட்ட வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து விட்டதால் மனம் உடைந்து வாழ்வாதாரம் இழந்து குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் பக்கத்து வீட்டின் உதவியோடு  மூவரும் வீதியில் நிற்கிறார்கள். 

யாரேனும் உதவிக்கரம் நீட்டுவார்கள்  என்ற எதிர்பார்ப்போடு,

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments