புதிய பாதை அமைக்கும் பணி! சென்னை ரயில் பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்!

 

-MMH

      சென்னை - செங்கல்பட்டு இடையே மூன்றாவது புதிய பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், புறநகர் மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.சென்னை - செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை அடுத்து, கடற்கரை -தாம்பரம்-செங்கல்பட்டு -காஞ்சிபுரம் -அரக்கோணம் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நாளை முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை இந்த போக்குவரத்து மாற்றம் நடைமுறையில் இருக்கும். இதன்படி, மேற்குறிப்பிட்ட வழித்தடங்களில் 160 ரயில்கள் மட்டுமே இயக்கப்படவுள்ளன. 15 முதல் 20 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்ன கடற்கரை -தாம்பரம்; தாம்பரம் -செங்கல்பட்டு; செங்கல்பட்டு -அரக்கோணம் இடையே தற்போது வார நாட்களில் 244 மின்சார ரயில்களும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் 202 புறநகர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன் சென்னை.

Comments