தமிழகத்தில் ஜெயிக்கப்போவது யாரு? அதிமுக கூட்டணிக்குக் காத்திருக்கும் பேரிடி!

 

-MMH

     மிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அடுத்து கூட்டணி விவகாரம், புதிய கூட்டணிகள், தொகுதி பங்கீடு என அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஏபிபி நிறுவன கருத்துக் கணிப்பு முடிவுகளும், எதிர்பார்ப்புகளும் வெளியாகியுள்ளன. இதில், திமுக கூட்டணி (திமுக + காங் + இதர கட்சிகள்) 41.4% வாக்குகளை பெற்று 154 முதல் 162 தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி 39.4% வாக்குகளை பெற்றது. இந்தாண்டு 2% கூடுதல் வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணி (அதிமுக+பாமக+பாஜக+இதர கட்சிகள்) இந்த தேர்தலில் 28.6% வாக்குகளை பெற்று 58 முதல் 66 தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016 தேர்தலில் அதிமுக கூட்டணி 43.7% வாக்குகளை பெற்றது. அத்துடன் ஒப்பிட்டால் இந்தாண்டு 15.1% வாக்குகளை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் 6.9% வாக்குகளையும் (2 முதல் 6 தொகுதிகள்) அமமுக 6.9% வாக்குகளையும் (1முதல் 5 தொகுதிகள்) இதர கட்சிகள் 14.8% வாக்குகளையும் (5 முதல் 9 தொகுதிகள்) பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-பாரூக்.

Comments