சிங்கம்புணரி இயற்கை விவசாயிக்கு பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது!

 

-MMH

       உலகம்பட்டியை சேர்ந்த இயற்கை விவசாயி சிவராமனுக்கு, 'மாநில அளவிலான பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். சிங்கம்புணரி தாலுகா, உலகம்பட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சிவராமன், இயற்கை வளங்களை மேம்படுத்தும் வகையில் உலகம்பட்டி பகுதியில் பல்வேறு வகையான பரிசோதனை முயற்சிகள் செய்து அவற்றை விவசாயத்தில் பயன்படுத்தி வருகின்றார்.

எனவே, விவசாயி சிவராமனை கெளரவிக்கும் வகையில்  தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை சார்பில் மாநில அளவிலான பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் 'பாரம்பரிய நெல் பாதுகாவலர்' விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

-அப்துல் சலாம்.

Comments