இரவு நேரத்தில் தூக்கம் தவிர்த்தால்..பின் விளைவுகள் பல!!

     -MMH 
     இரவு நேரத்தில் தூக்கம் தவிர்த்தால் சிறுநீரகம் தொடர்பான அனைத்து நோய்களும் வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

நம் அன்றாட வாழ்வில் உணவு, தண்ணீர் மற்றும் தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று. அதனை தினந்தோறும் சரியாக செய்ய வேண்டும். இல்லையென்றால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். அளவுகடந்த உணவுகளை உட்கொண்டால் உடலில் பல நோய்கள் உண்டாகும். அதனைப் போலவே தூக்கம் தவிர்த்தால் பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் தூக்கம் தவிர்ப்பதால் அதை பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது.

அதிலும் குறிப்பாக சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிறுநீரகங்களில் சேதமடைந்து இருக்கும் திசுக்களை இரவில்தான் உடல் பழுது பார்த்து சரி செய்கிறது.

ஆகவே இரவில் தூங்குவது அவசியம். குறிப்பாக உள்ளுறுப்புகள் பழுதுகள் மற்றும் கழிவுகள் நீங்கும் பணிகளை மேற்கொள்ளும். இரவு 11 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை விழித்திருந்து கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அதனால் இவ்வாறான வேலைகள் இருந்தாலும் இந்த நேரத்தில் தூங்குவது மிகவும் அவசியம்.

-ஸ்டார் வெங்கட்.

Comments