மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு பார்சலா? கமாண்டோ குவிப்பால் பரபரப்பு!

-MMH

     மதுரை விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் வந்த பார்சல் வெடிகுண்டா என்ற பரபரப்பு, 3 மணி நேரத்திற்குப் பின்னர் புஸ்ஸாகி போனது.மதுரை விமான நிலைய சரக்கு முனைய பகுதியில் நேற்று சென்னை செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கான பார்சல்கள், ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டன.

அதில் நாகர்கோவில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் பார்ட்ஸ் மற்றும் வயர் இணைப்புடன் காணப்பட்டதால் வெடிகுண்டு என ஊழியர்கள் சந்தேகப்பட்டு தகவல் அறிவித்தனர். தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஊழியர்கள் கன்னியாகுமரியில் இருந்து வந்த நான்கு பார்சல்களையும் பையில் வைத்து விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்பான இடத்தில் கொண்டு சென்றனர். 

வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனைக்கு பின் பார்சலை பிரித்து பார்த்தபோது, பார்சல்களில் இட்லி பொடி, மசாலா பொடி மற்றும் மிக்ஸர், காராபூந்தி ஆகியவற்றுடன் சாம்சங் கேலக்ஸி இருந்தது. அதனுடன் சார்ஜர் இணைக்கப்பட்டு இருந்ததால் டெட்டனேட்டர் ஆக இருக்குமோ என சந்தேகம் எழுந்தது. அதைத்தொடர்ந்து ஊழியர்கள் முழுசாக சோதனை செய்து வெடிகுண்டு இல்லை என உறுதி செய்தனர். பார்சல்களை மீண்டும் தபால் துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் மூன்று மணி நேர பரபரப்பு ஓய்ந்தது .

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ராயல் ஹமீது.

Comments