கோவை கார் ஓட்டுனருக்கு ஷாக்....! காரில் தவறவிட்ட பையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள்! போலீசார் விசாரணை!!

 

-MMH 

     


சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்தவர் பாபி.இவர் சிசி டிராவல்ஸ் என்ற பெயரில் கால் டாக்சி நிறுவனம் வைத்து உள்ள இவர் கோ டேக்சி,ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்த  அடிப்படையில் பணியாற்றி  வருகிறார்.நேற்று காலை இவரது வாகனத்தை கோல்டுவின்ஸ் இருந்து கே.ஜி.மருத்துவமனை செல்ல வாகனம் வேண்டும் என கேட்டு நபர் ஒருவர் நேற்று காலை 9 மணிக்கு காரை வாடகை எடுத்துள்ளார்.அதில் பெண்கள் உட்பட நான்கு பேர் பயணித்து உள்ளனர்.அவர்களை மருத்துவமனையில் இறக்கிவிட்ட  பிறகு பல்வேறு வாடகைகளை எடுத்துவிட்டு இரவு 9 மணியளவில் ஓட்டுனரும் காரின் உரிமையாளுருமான பாபி வீட்டிற்கு சென்றுள்ளார். 

வீட்டில் இருந்தபோது காலை வாகனத்தில் பயணித்த பயணி அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஏதாவது பை தங்களது காரில் உள்ளதா என கேட்டு உள்ளார். பார்த்து சொல்வதாக பாபி கூறிவிட்டு காரின் டிக்கியை சோதனை செய்தபோது பிக் ஷாப்பர் பை இதுப்பதை கண்ட அவர்  காரின் டிக்கியில்  பை ஒன்று இருப்பதாகவும் அது உங்களுடையதா எனவும் அதில் என்ன இருக்கிறது பையின் அடையாளங்களை கூறுமாறு கேட்டு உள்ளார்.மேலும் எதாவது விலை உயர்ந்த பொருட்கள் உள்ளதா என வினவியபோது துணிமணிகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

பையை திறந்து பார்த்தபோது பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதை கண்ட டாக்சி உரிமையாளர் இது குறித்து ஓட்டுனர் சங்க நிர்வாகிகளிடம் தெர்ரிதிவித்து உள்ளார். நேற்று காலை அந்த பையை பந்தயசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பையை தவறவிட்ட நபரை காவல் நிலையம் வர சொல்லி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் காரில் தவறவிட்ட நிலையில் துணிமணிகள் மட்டுமே உள்ளது என கூறியுள்ளதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-சீனி போத்தனூர்.

Comments