இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை உலா!! - பீதியில் மக்கள்!!

     -MMH

      கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை  உலா வந்து மக்களை அச்சுறுத்தி வந்தது இந்நிலையில் நேற்று இரவு ஆழியார் அறிவு திருக்கோவில் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது இதை அறிந்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதனை அடுத்து  வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் பேரில் விரைந்து வந்த  வனத்துறை அதிகாரிகள் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு யானையை வனத்துக்குள் அனுப்பினார் இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு தூக்கத்தை இழந்து பயத்துடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments