பொள்ளாச்சி நேர்நிலையம் சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்..!!

     -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேர்நிலையம் அருகில் பொள்ளாச்சி திண்டுக்கல் சாலை விரிவாக்க பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகிறது.

தற்போது தீ அணைப்பு நிலையம் மார்க்கெட் பகுதி வாணியர் மடம் சாலை ஆகிய பகுதிகளில் கழிவு நீர் செல்ல கால்வாய்கள் கட்டும் பணிகளை பணியாளர்கள்  மேற்கொண்டு வருகின்றனர்.

மரப்பேட்டை பகுதியில் பாலம் கட்டுவதற்கு JCP இயந்திரம் மூலம் குழிகள் தோண்டபட்டு பணிகள் மூழுவீச்சாக நடைபெற்று வருகிறது.

மண் புழுதி பரப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை இயக்குகின்றனர். நெடுஞ்சாலை துறை மூலம் நீர் பீய்ச்சி அடித்து மண் புழுதியை குறைந்து வருகின்றனர் பணியாளர்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.

Comments