பொள்ளாச்சியில் பரபரப்பு..!!உயிர் தப்பிய பேருந்து பயணிகள்..!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தில் உயிர் தப்பிய பேருந்து நிலைய பயணிகள்.

பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் அண்ணா பேருந்து நிலையத்தில் தற்போது சுமார் ஆறு மணி அளவில் பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்ல வந்த அரசு சொகுசு TN01 AN2917 என்ற பேருந்து பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்கு வந்தது.


பேருந்து நிலையத்தில் உள்ளே நுழைந்து சென்னை ரேக்கில் இடும் நேரத்தில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விரைந்து வந்து பாய்ந்தது.

மக்கள் அங்கும் இங்குமாய் ஓடினர்.பேருந்து பயணத்திற்கு பழனி பஸ் நிற்கும் இடத்தில் நின்ற பயணிகள் தலை தெறிக்க ஓடினர் செய்வதரியாது.


கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கடைசியில் பழனி  பேருந்து நிற்கும் ரேக்கில் முட்டிபோய் உடைத்து நின்றது.தனது பயணத்திற்கு காத்திருந்த ஒரு பெண்மணி மேல் பட்டு அவர் மயக்கம் அடைந்தார்.மற்றவர்கள் ஓடியதால் நூல் இலையில் உயிர் தப்பினர். பொள்ளாச்சி தாலுக்கா காவல்துறை விசாரித்து வருகிறது.


பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி. 

Comments