தண்ணீரில் விளக்கு எரியும் அற்புதமான கோயில்!!

     -MMH

     தண்ணீரில் விளக்கு எரியும் அற்புதமான கோயில் எங்கு உள்ளது தெரியுமா? இது குறித்து பார்ப்போம்.

இந்து மதத்தில் கோயில்கள், பூஜை, புனஸ்காரம், வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும். கடவுளை மனதார நினைத்து வேண்டினால் அது நிறைவேறும் என்பது அனைவரின் கருத்து. அவ்வாறு செய்யும் போது கடவுள் நமது பிரச்சனைகளை எல்லாம் போக்குவார் என்பது நமது எண்ணம். இந்தியாவில் ஒரு கோவிலில் நீரில் விளக்கு எரிகிறது என்ற விஷயத்தை சொன்னால் நம்பமுடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. இந்த அதிசயத்தை காண ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

மத்திய பிரதேசத்தின் காடியா காட்டில் உள்ள மாதா ஜி கோயிலில் எரியும் விளக்கை காண ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

50 ஆண்டு பழமையான இந்த கோவிலில் தண்ணீரில் விளக்கு ஏற்ற படுவதாக மக்கள் நம்புகின்றனர். ஒருநாள் இரவு மாதாஜி கோயில் பூசாரி கனவில் வந்த தெய்வம் காளி இந்த ஆற்றில் இருந்து ஒரு விளக்கில் தண்ணீரை ஊற்றி கோவிலில் ஒரு விளக்கில் ஏற்றும்படி கூறினாராம். மறுநாள் காலையில் பூசாரி நதி நீரை எடுத்து விளக்கில் ஊற்றி எரிய வைத்த போது உண்மையில் விளக்கு எரிந்தது. இதை கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர். அன்று முதல் இன்று வரை நெய் எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் விளக்கு எறிவதாக கூறப்படுகிறது.

-சுரேந்தர்.

Comments