மார்ச் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி! சுகாதாரப்பணியாளர்களே! தடுப்பூசி போட்டுட்டீங்களா..?

     -MMH

     சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது, வரும் 22ம் தேதியுடன் நிறுத்தப்படவுள்ளது. நாடு முழுவதும் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார பணியாளர்களுக்கு, கடந்த ஜன.,16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பிப்.,1ம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.கொரோனா தடுப்பூசிக்கு விருப்பம் தெரிவித்து, 40 ஆயிரம் சுகாதார பணியாளர்கள், 20 ஆயிரம் முன்கள பணியாளர்கள், ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். இதற்கென, கோவைக்கு, 83 ஆயிரம் கோவிஷீல்டு, 13 ஆயிரத்து, 700 கோவாக்ஸின் சேர்த்து 96 ஆயிரத்து,700 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.ஆனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்த்து இதுவரை, 22 ஆயிரம் பேருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'பிப்.,22க்கு பின் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது.

அடுத்தகட்டமாக, பொதுமக்களுக்கு மார்ச் முதல் வாரத்தில் தடுப்பூசி செலுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே, அதற்குள் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது சிறந்தது' என்றனர்.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments