அங்கன்வாடி மையத்தில் ஊசி போட்டு கொண்ட மூன்று மாத குழந்தை உயிரிழப்பு! - காவல்துறையினர் விசாரணை!!
கோவை மசக்காளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் விஜயலட்சுமி தம்பதியினருக்கு 3 வயதில் கிஷாந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது. அக்குழந்தைக்கு சளி பிடித்திருந்ததால் நேற்று விஜயலட்சுமி அக்குழந்தை மசக்காளிப்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மைத்திற்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவர் குழந்தைக்கு ஊசி போட்டு மருந்து ஒன்றை சிறிது நேரம் கழித்து தரும்படி கூறி அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு சிறிது நேரம் கழித்து குழந்தைக்கு 4 சொட்டு மருந்து அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2 மணி நேரம் கழித்து குழந்தை மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுள்ளான். உடனடியாக உப்பிலியப்பாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும்படி கூறி உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றுள்ளார். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து விஜயலட்சுமி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் குழந்தையின் இறப்பு குறித்து வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கன்வாடி நிலையத்தில் ஊசி போட்டு கொண்ட குழந்தை சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சீனி,போத்தனூர்.
Comments