புதர் மண்டி, பாழடைந்து நிற்கிறது கலைஞர் பூங்கா!! - சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!!

     -MMH

     பொள்ளாச்சி  சூளேஸ்வரன்பட்டி பகுதியில் உள்ள கலைஞர் பூங்காவை பராமரிக்கா தவறியதால் உபகரணங்கள் உடைந்து புதர் மண்டி இருக்கிறது. பூங்காவில் உள்ள கட்டிடம் பாழடைந்து நிற்கிறது. இந்தக் கட்டடத்தில் பகல் நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்துவதும், இரவு நேரங்களில் சில சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் கட்டடத்தை இடித்து விட்டு பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments