தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்.!!

     -MMH
     தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று  கூடுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடைபெற இருக்கிறது. காலை 11 மணிக்கு துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், அது தொடர்பான விவரங்களை நிதித் துறைச் செயலாளர் செய்தியாளர்களிடம் எடுத்துரைப்பார். சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுவும் கூடி, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவெடுக்கும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments