100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து காவல் துறை சார்பில் கையெழுத்து இயக்கம்!!

     -MMH
     பொள்ளாச்சி வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து காவல் துறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பஸ்சிற்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள் மற்றும்  பொதுமக்களிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி பேசுகையில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் மொபைல் போன் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதை முற்றிலும்  தவிர்க்க வேண்டும் 

இதனால்  பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது மாணவ மாணவிகள் பெற்றோர் கஷ்டத்தை உணர்ந்து நன்றாக படிக்க வேண்டும். குறிப்பாக மாணவிகளுக்கு ஏற்படும் எந்த பிரச்சனையானாலும் தயங்காமல் காவல் நிலையத்தை அணுகலாம் பள்ளி செல்லும் குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிப்பது பெற்றோரின் கடமையாகும் என அறிவுறுத்தினார்.

-திவ்யா குமார், வால்பாறை.

Comments