பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 1.23 லட்சம் ரொக்கம் சிக்கியது!

 

-MMH

                செங்குன்றம் அடுத்த நல்லூர் சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1.23 லட்சம் ரொக்கம் சிக்கியது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், வருவாய் துறையினர், போலீசார் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர், பல்வேறு இடங்களில் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை செங்குன்றம் அடுத்த நல்லூர் சோதனைச்சாவடியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி சீனிவாசன் தலைமையில், செங்குன்றம் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆந்திர மாநிலம் சூலூர் பகுதியில் இருந்து சந்தேகத்திற்கிடமாக மின்னல் வேகத்தில் வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, காரில் வந்தவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், காரில் வந்தவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாகுபலி திமன்னா(43) என்பது தெரியவந்தது. மேலும், இவர் ஆந்திர மாநிலம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். சொந்த ஊர் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு காரில் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து,  தேர்தல் பறக்கும் படையினர் ஆவணமின்றி எடுத்து வந்த பணத்தை பறிமுதல் செய்து மாதவரம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

-பீர் முகம்மது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments