மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு....! உச்சவரம்பை 24 வாரங்களாக உயர்த்தி சட்டத்திருத்த மசோதா! நாடாளுமன்றம் ஒப்புதல்!

-MMH

        ருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு செய்வதற்கான உச்சவரம்பை 24 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 1971-க்கு முன்னர் இந்திய கிரிமினல் சட்டப்படி கருக்கலைப்பு செய்வது குற்றமாக கருதப்பட்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. 1971-ம் ஆண்டு மருத்துவரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை இந்தியா கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் படி 20 வாரங்கள் வரை இருக்கும் கருவை கலைக்கலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மருத்துவரீதியன காரணங்களுக்காகவும் கருவை சுமக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்தான சூழலிலும், கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருந்தாலோ, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் ஏற்பட்ட கர்ப்பமாக இருந்தாலோ 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யலாம் என இச்சட்டம் கூறுகிறது.

பதிவுபெற்ற மருத்துவர் மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம். கர்பப்பையில் இருக்கும் கரு 12 வாரங்களுக்குள் இருந்தால் ஒரு மருத்துவரே முடிவு செய்து கருக்கலைப்பு செய்யலாம். அதுவே 12 முதல் 20 வாரங்களாக இருந்தால் இரண்டு மருத்துவர்கள் சேர்ந்தே முடிவு செய்ய முடியும். மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு செய்வதற்கான உச்சவரம்பை 24 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக 20 வாரங்களுக்கள் கருக்கலைப்பு செய்யலாம் என இருந்த முந்தைய சட்டத்தில் திருத்ததை மேற்கொண்டு மேலும் 4 வாரங்கள் கூட்டி 24 வாரங்களாக உயர்த்தியுள்ளது. இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் 12 வாரங்களுக்குள் இருந்தால் ஒரு மருத்துவரே முடிவு செய்யலாம். 12-20 வாரங்களாக இருந்தால் இரண்டு மருத்துவர்கள் முடிவு எடுக்கலாம் என இருந்தது. இப்போது ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 20 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய மசோதா அனுமதிக்கிறது. மேலும் 20 முதல் 24 வாரங்களுக்கு இரண்டு மருத்துவர்கள் சேர்ந்தே முடிவு செய்ய முடியும்.👀

-Ln.இந்திராதேவி முருகேசன்,  சோலை. ஜெய்க்குமார்.

Comments