தமிழகத்தில் உள்ள சுமார் 2500 அறக்கட்டளைகள் ஒருங்கிணைந்து,புதிய அரசியல் கட்சி!!
தமிழகத்தில் உள்ள சுமார் 2500 அறக்கட்டளைகள் ஒருங்கிணைந்து உருவாகியுள்ள புதிய விடியல் மக்கள் கட்சி எனும் புதிய அரசியல் கட்சியின் முதல் பொதுக்குழு செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. புதிய விடியல் மக்கள் கட்சி எனும் புதிய அரசியல் கட்சியின் முதல் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சீமா அரங்கில் நடைபெற்றது.கட்சியின் நிறுவன தலைவர் ஏ.டி.முரசொலி தலைமையில் நடைபெற்ற இதில்,தலைவர் டாக்டர் கோவை சரவணன் முன்னிலை வகித்து பேசினார்.
அப்போது அவர், முழுவதும் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த கட்சி துவங்கியிருப்பதாகவும்,தமிழகத்தில் உள்ள சுமார் 2500 பொது நல அறக்கட்டளைகளை இணைத்து இந்த அரசியல் கட்சியை உருவாக்கி உள்ளதாக பேசினார். குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் புதிய நூலகங்கள் எதுவும் துவங்கப்படாத நிலையில் எழுத்தாளர்கள் மற்றும் புதிய சிந்தனையாளர்களை உருவாக்கும் வகையில் எங்களது கட்சியின் நோக்கம் புதிய நூலகங்கள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட போவதாகவும், அறக்கட்டளைகள் சார்ந்த சமூக பணிகளை தடையின்றி செய்வதற்கு இந்த புதிய அரசியல் கட்சியை துவக்கி உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த கூட்டத்தில் பொது செயலாளர் சாமுவேல் ராஜா மற்றும் மகளிர் அணி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சீனி,போத்தனூர்.
Comments