சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது!
விமான போக்குவரத்துக்கு ஏப்.,30 வரை தடை சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, கொரோனா காரணமாக 2020 மார்ச் 23 முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் மே முதல் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.இதையடுத்து ஜூலை முதல் குறிப்பிட்ட அளவிற்கு சர்வதேச விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொதுவான சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் சரக்கு விமான சேவைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விமான போக்குவரத்து வழக்கம் போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சுரேந்தர்.
Comments