40வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் குளுக்கோமா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்!!

    

  -MMH

40வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் குளுக்கோமா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என குளுக்கோமா பிரிவு ஆலோசகர் டாக்டர் சித்ரா தெரிவித்துள்ளார்.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தி ஐ பவுண்டேஷனில் உலக குளுக்கோமா வாரத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் இலவச கண் அழுத்த நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து தி ஐ பவுன்டேஷன் மருத்துவ இயக்குனரும், குளுக்கோமா பிரிவு ஆலோசகருமான சித்ரா மற்றும் குளுக்கோமா குழந்தைகள் கண் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த முரளிதர் ஆகியோர் கூறுகையில் 40 வயதிற்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் இந்தியர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு கண் பார்வையை இழக்க வாய்புள்ளதாகவும், இந்த குளுக்கோமா என்பது படிப்படியாக எந்த ஒரு அறிகுறியும் இன்றி கண் அழுத்தம் அதிகரிப்பதனால் கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.

 மேலும் இந்த குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கண்பார்வை பரிசோதனை மேற்கொண்டு ஆரம்ப நிலையலேயே கண்டறிந்து இந்த குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு சிகிச்சையை மேற்கொள்ள  வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments