மான் வேட்டையாடிய 4 பேர் கைது!!
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் சமயபுரம் என்ற பகுதியில் வசித்து வரும் 4 பேர் மான் வேட்டையாடிய தாக போலீசாருக்கு தகவல் வந்தது இதனை அடுத்து
அவர்கள், சமயபுரத்தை சேர்ந்த நாகலிங்கம் (வயது 64), செல்வராஜ் (52), பழனிசாமி (41), மணி (43) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், 4 பேரும் நெல்லிமலை காப்புக்காடு சமயபுரம் வனப்பகுதியில் சுருக்கு கம்பி வைத்து மானை வேட்டையாடியதும் தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் 4 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து மான் இறைச்சி மற்றும் அவர்கள் மான் வேட்டையாட பயன்படுத்திய சுருக்கு கம்பி, வலை ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
-அருண்குமார், கோவை மேற்கு.
Comments