சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலர்கள் நியமனம்!

 

-MMH

           மிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. வருகிற 12-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் தேர்தல் பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டு உள்ளது. பறக்கும்படை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனை நடத்தி தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்களை கைப்பற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. காரைக்குடி சட்டமன்றத்தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக, தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவரது கைபேசி எண்: 9445000470. திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக கலால் உதவி ஆணையர் சிந்து நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கைபேசி எண்: 9445074593. சிவகங்கை சட்டமன்றத்தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் நியமிக்கப்பட்டள்ளார். இவரது கைபேசி எண்: 9445000471. மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலெட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கைபேசி எண்: 9445477845. மேற்கண்ட சட்டமன்றத் தொகுதிகளின் விவரங்கள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தகவல் தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

-பாரூக், சிவகங்கை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments