ரூ .50 லட்சம் வரை கடனைப் பெறலாம்… ஆவணங்கள் தேவையில்லை… எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு!!
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வணிகங்களுக்கு எஸ்பிஐ எஸ்எம்இ தங்கக் கடனை வடிக்கையாளர்களை கவரக்கூடிய வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
எஸ்பிஐ எஸ்எம்இ தங்க கடனின் கீழ், நீங்கள் எந்த இடையூறும் இல்லாமல், ரூ .1 லட்சம் முதல் ரூ .50 லட்சம் வரை கடன் பெறலாம். “எஸ்பிஐயின் எஸ்எம்இ (SME) தங்கக் கடன் மூலம் உங்கள் தொழிலை மிகவும் நேர்த்தியாக வளர்க்க உதவும். இந்த திட்டத்தில் இப்போதே விண்ணப்பித்து கடனைப் பெறுங்கள். இதற்கான தொந்தரவு இல்லாமல் எளிமையான செயல்முறை மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த கடன் பெற இன்றே உங்கள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையை அணுகலாம் என்று எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.
Comments